ஆர். ஏ புரத்தில் வசிக்கும் மக்கள் அரசின் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து தங்கள் பகுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலமாக காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். நமது பகுதியில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள RAPRA என்ற தொண்டு நிறுவனம் நீண்ட நாட்களாக தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து மாடித்தோட்டம் மற்றும் காய்கறித்தோட்டம் சம்பந்தமாக நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளனர். சமீபத்தில் தோட்டக்கலை துறை காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய தொடங்கியவுடன் மற்றொரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தோட்டக்கலை துறையின் காய்கறி வாகனங்கள் இங்குள்ள பூங்கா அருகே நிறுத்தப்பட்டு காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்தனர் அவ்வாறு விற்பனை செய்த பழங்கள் காய்கறிகள் அனைத்தும் புதியதாகவும் தரமானதாகவும் மற்றும் நியாயமான விலையிலும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.அனைவரும் மகிழ்ச்சியோடு வந்து வாங்கி செல்கின்றனர். இதற்கு பின் பங்கனப்பள்ளி போன்ற சுவை மிக்க மாம்பழங்களையும் வாகனங்கள் மூலமாக விற்பனை செய்தார்கள். ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதாகவும், மேலும் வார சந்தை போல தொடர்ந்து நடத்த RAPARA வின் Dr சந்திரசேகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதன் விளைவாக தோட்டக்கலை துறை கோரிக்கையை பரிசீலனை செய்து வருகின்றனர். உங்கள் பகுதியில் இது போன்று வார சந்தை நடத்த விரும்பினால் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள (RAPARA) அஸோசியேசன் நிறுவனர் Dr சந்திரசேகரனை 9841030040 என்ற எண்ணில்  தொடர்புகொள்ளவும்.

Verified by ExactMetrics