சீனிவாசபுரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரண்டு இளைஞர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடையாறு ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது வெள்ளிக்கிழமை கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர், ஞாயிற்றுக்கிழமை கொட்டிவாக்கம் கடற்கரையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூன்று இளைஞர்கள் அடையாறு ஆற்றில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் தங்கள் கட்டுமரத்தை நீரோட்டத்தில் இருந்து மீட்கும் போது ஆற்றில் அடித்துசெல்லப்பட்டனர்.

மீன் பிடிக்க சென்ற மூன்று நபர்களில் ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.