மத நிகழ்வுகள்

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவின் கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்வு.

மயிலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் பிறந்து வளர்ந்த, கத்தோலிக்க பாதிரியார் விசுவாசம் செல்வராஜ், அடுத்த மாதம் அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள தேவாலயங்களுக்கு தலைவராக பதவியேற்கவுள்ளார். இவருக்கு வயது 55. போப் ஆண்டவர் இவரை சமீபத்தில் அந்தமான் தீவின் கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார். பதவியேற்பு விழா ஆகஸ்ட் 21ம் தேதி அந்தமான் தீவின் தலைநகர் போர்ட்பிளேயரில் நடக்க உள்ளது. பாதிரியார் விசுவாசம் செல்வராஜ் அவர்கள் ஆந்திர மகிள சபாவின் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் பிறந்தார். பாதிரியாரின் குடும்பம் கிரீன் வேஸ் சாலையில் வசித்து வந்தனர். இவரது குடும்பத்தினர் அவல் வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வந்தனர். தற்போதுகூட பாதிரியாரின் சகோதரர் பாஸ்கர் மந்தைவெளியில் தேவநாதன் தெருவில் அவல் மற்றும் அதனுடன் சேர்ந்து வேரு சில பொருட்களையும் மொத்தவியாபாரம் செய்து வருகிறார்.

பாதிரியார் செல்வராஜ் தனது பள்ளிப்படிப்பை ராஜா முத்தையா பள்ளியிலும் பின்னர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியிலும் பின்னர் பாதிரியார் படிப்பில் சேர்ந்து படித்ததாக தெரிவிக்கிறார். மேலும் பாதிரியார் படிப்பை முடிக்கும்போது அந்தமான் பகுதிக்கு பாதிரியார் தேவை இருப்பதாகவும் தெரிவித்தனர் அப்போது அவர் அந்தமானுக்கு சென்று சேவை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அன்று முதல் பாதிரியார் செல்வராஜ் பல்வேறு பதவிகளில் இருந்துவந்துள்ளார். பிஷப் குழுவிலும் பணியாற்றி வந்துள்ளார். ஆகவே தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அந்தமான் தீவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

admin

Recent Posts

விண்டேஜ் தமிழ் திரைப்பட பாடல்கள் இசை நிகழ்ச்சி. மே 1 மாலை. அனுமதி இலவசம்.

நீங்கள் விண்டேஜ் தமிழ் திரைப்பட பாடல்களை விரும்பினால், இந்த இசை நிகழ்ச்சி உங்களுக்கானது. மயிலாப்பூரை சேர்ந்த கே.ஆர். சுப்பிரமணியன் (நண்பர்களுக்கு…

3 days ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பறவைகளுக்கு தானியங்கள், தண்ணீர் வசதி

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள், பறவைகளுக்கு தானியங்கள் மற்றும் தண்ணீர் வழங்கும் ஒரு கூடத்தை சென்னை மாநகராட்சி ஊழியர்கள்…

3 days ago

மந்தைவெளி பகுதியில் நுங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

மந்தைவெளி தெரு அருகே நுங்குகள் விற்பனையை வியாபாரி ஒருவர் துவங்கியுள்ளார். இந்த நுங்குகள் மதுராந்தகத்திலிருந்து கொண்டு வருவதாக வியாபாரி தெரிவிக்கிறார்.…

1 week ago

செயிண்ட் மேரிஸ் சாலையில் ஒரு சிறிய விபத்து

மந்தைவெளியில் ஏப்ரல் 23 இன்று காலை ஒரு MTC பேருந்தும் ஒரு காரும் மோதி ஒரு சிறிய விபத்து ஏற்பட்டது.…

1 week ago

நாரத கான சபாவில் கோடை நாடக விழா. பன்னிரண்டு புதிய தமிழ் நாடகங்களின் அரங்கேற்றம். ஏப்ரல் 22 முதல்

கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா தனது 34வது கார்த்திக் ராஜகோபால் கோடை நாடக விழாவை ஏப்ரல் 22 ஆம் தேதி…

2 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் ஒரு சிறு வியாபாரியின் அவலநிலை.

ஒரு அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு, தனது அன்றாட உணவுக்காக சம்பாதிக்க விரும்பும் ஒரு இளம் பூ விற்பனையாளரை நடைபாதை…

2 weeks ago