புயல் மழையின் போது அதிகாரிகள் எதிர்கொண்ட சவால்கள்

நேற்று காலை முதல் சூறாவளி காலநிலையின் போது சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றியதற்காக மயிலாப்பூர் மக்களிடமிருந்து மாநில அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். இன்றைய நாள், அவர்கள் அனைவருக்கும் கடினமாக இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் இருந்தன – வீதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை நறுக்கி வெளியேற்றுவது மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்வது போன்ற பணிகள் பெரிய சவால்களாக இருந்தது. போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வாலின் உத்தரவைப் பின்பற்றி வழக்கமான பணிகளை மேற்கோள்வது மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து வெள்ளப் பிரச்சினைகளை சரி செய்தனர். போக்குவரத்து போலீசாரும் மழையில் கூட தங்களுடைய பணியை சிறப்பாக செய்தனர். தினசரி குப்பைகளை அகற்றும் உர்பேசர் சுமித் ஊழியர்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை விரைவாக மழை நின்ற நேரத்தில் செய்து முடித்தனர். உள்ளூர் பிரிவுகளில் உள்ள TANGEDCO மற்றும் மெட்ரோவாட்டர் ஊழியர்கள் SOS அழைப்புகளை ஏற்று பிரச்சனையை சரி செய்வதற்காக தங்களுடைய பணிகளில் இருந்தனர். இன்று நண்பகலுக்குப் பிறகு சூறாவளி காற்று வலுவடைந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

Verified by ExactMetrics