சென்னை மெட்ரோ வாரன் சாலையில் பேருந்து நிழற்குடை அமைத்துள்ளது.

ராமசாமி அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே வாரன் சாலையில் எம்டிசி பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.

சென்னை மெட்ரோ பணியால் மாற்றுப்பாதையாக உருவாக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் வெயிலிலும், மழையிலும் தவித்த எம்டிசி பயணிகளுக்கு இது நிம்மதியாக உள்ளது.

முன்னதாக சென்னை மெட்ரோ ஷாமியானா அமைத்தது அது பயனுள்ளதாக இல்லை.

தெற்கு நோக்கி செல்லும் எம்டிசி பேருந்துகள் இந்த வழித்தடத்தில் சென்று, இங்கு நின்று மந்தவெளி, ஆர்.ஏ.புரம் மற்றும் அதற்கு அப்பால் சென்றடையும்.

சமீப வாரங்களாக, கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ பேருந்து நிழற்குடைகளை அமைக்கிறது.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics