சென்னை மெட்ரோ: டிசம்பர் 10 முதல் கச்சேரி சாலை பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 10 சனிக்கிழமை முதல் கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை செயல்படுத்துகிறது. இது ஒரு வாரம் சோதனை அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 16 வரை.

மிக முக்கியமாக, கார்கள், பேருந்துகள் மற்றும் வேன்கள் லஸ் சர்க்கிள் முனையிலிருந்து சாந்தோம் கதீட்ரல் முனை வரை வழக்கம்போல் செல்லமுடியாது.

இந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் விவரங்கள்:

1. முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கல்விவாரு தெருவில் தற்போதுள்ள ஒருவழிப்பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது; கச்சேரி சாலையில் இருந்து முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

2. லஸ் ஜங்ஷனிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞசாலைக்கு செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டு கல்விவாரு தெரு, முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெரு மற்றும் பஜார் சாலையில் திருப்பி விடப்படும்.

3. சாந்தோமில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் நோக்கி செல்லும் இலகுரக மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டு தேவடி தெரு, நடுத்தெரு, ஆர் கே மட சாலை (அல்லது) மாதா சர்ச் சாலை மற்றும் ஆர் கே மட சாலையில் திருப்பி விடப்படுகின்றன.

4. சென்னை மாநகர பேருந்து எண். 12Bயின் இயக்கம் – லஸ்ஸிலிருந்து பட்டினப்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கச்சேரி சாலை வழியாக தடைசெய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர். ஆர்.கே.சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுகிறது.

5. MTC பேருந்து 12X இயக்கம் – லஸ்ஸிலிருந்து பட்டினப்பாக்கம் பேருந்து முனையத்திற்கு கச்சேரி சாலை வழியாக தடைசெய்யப்பட்டு ஆர்.கே.மட ரோடு மற்றும் சவுத் கெனால் பேங்க் ரோட்டில் திருப்பி விடப்பட்டு, திரும்பும் வழியில் மந்தைவெளி பேருந்து நிலையம் வரை, வழக்கம் போல் இயங்கி வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர் கே மட சாலை வழியாக செல்லும்.

Verified by ExactMetrics