மெரினா பகுதியில் சென்னை மெட்ரோ வேலைக்காக பெரிய அளவிலான இடங்களில் தடுப்புகள் அமைப்பு

மெரினா சர்வீஸ் சாலையின் மேற்கு பகுதியிலும், நடைபாதை ஓரத்திலும், சென்னை மெட்ரோ திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் முழுவதுமாக தடுப்புகளை அமைக்கத் தொடங்கியுள்ளனர். இந்த இடத்தில்தான் புதிய மெட்ரோ ரயில் பாதை மற்றும் நிலையங்களின் பணிகள் தொடங்க உள்ளது.

காந்தி சிலை முதல் காமராஜர் சிலையிலிருந்து சில மீட்டர்கள் வரையிலும், சர்வீஸ் ரோடு ஓரம் (மேற்குப்பக்கம்) இருந்து புல்வெளி வரையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இங்குதான் பெரிய, அளவிலான மெட்ரோ நிலையங்கள் கட்டப்படும், மேலும் சுற்றுச்சூழலுக்குத் தகுந்தவாறு வடிவமைப்பும் வேலையும் தனித்துவமாக இருக்கும்.

காந்தி சிலையை அவ்வையார் சிலைக்கு அருகில் உள்ள புல்வெளிக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்த நிலையில், உணவகங்கள், பொது கழிப்பறைகள் மற்றும் பிற கட்டமைப்புகள் மூடப்பட்டுள்ளன.

Verified by ExactMetrics