சென்னை மெட்ரோ: டி.டி.கே சாலையின் ஒரு பகுதி, சி.வி. ராமன் சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்.

ஆழ்வார்பேட்டையில் சென்னை மெட்ரோ பணியை எளிதாக்கும் வகையில், இன்று சனிக்கிழமை காலை முதல், ஹோட்டல் கிரவுன் பிளாசா பக்கத்திலிருந்து ஆழ்வார்பேட்டை போக்குவரத்து சிக்னல் சந்திப்பு நோக்கி செல்லும் போக்குவரத்து, பாரதிதாசன் சாலை, சீத்தம்மாள் காலனி வழியாக திருப்பிவிடப்பட்டு டி.டி.கே சாலையில் சேரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இதனால், மெக்டொனால்ட்ஸ் உணவகம் / சிவி ராமன் சாலை முதல் எத்திராஜ கல்யாண மண்டபம் வரை டி.டி.கே சாலை பகுதி மெட்ரோ பணிக்காக தடைப்பட்டுள்ளது.

இப்போதைக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு இந்த வழிமாற்றம் செயல்பாட்டில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Verified by ExactMetrics