சென்னை மெட்ரோ: லஸ் சர்ச் சாலையின் சிறிய பகுதி மூடப்பட்டது

சென்னை மெட்ரோ பணிகள் படிப்படியாக சிறிய பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இது வரும் வாரங்களில் அதிகமாகலாம்.

சில நாட்களுக்கு முன்பு, லஸ் சர்ச் சாலையில், துளசி சில்க்ஸ் கேட் முதல் எம்.சி.டி.எம். பள்ளி மற்றும் எம்.டி.சி பேருந்து நிறுத்தம் வரை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. இந்த சாலையின் இடதுபுறத்தில் உள்ள உள் சாலைகளுக்குள் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது.

பல மாதங்களுக்கு முன்பு, மெட்ரோ தனியார் காலி மனையை கையகப்படுத்தி, அதன் முக்கிய பணிகளை, சாலையின் வடக்குப் பகுதியில் அமைத்தது.

முசிறி சுப்ரமணியம் சாலை ஓரத்தில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.