சென்னை மெட்ரோ: தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வழித்தட எண்கள் அடங்கிய பலகைகளை வைத்துள்ளது. பயணிகள் நிழற்குடைகளை எதிர்பார்க்கின்றனர்.

எம்டிசி இறுதியாக, சென்னை மெட்ரோ பணியின் காரணமாக மயிலப்பூர் பகுதியில் பேருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர்வாசிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துள்ளது.

நேற்றிரவு முதல், மயிலாப்பூர் – மந்தைவெளி – அபிராமபுரம் பகுதிகளில் உருவாக்கப்பட்ட அனைத்து ‘தற்காலிக பேருந்து நிறுத்தங்களிலும்’ இப்போது நிறுத்தங்கள் மற்றும் பேருந்து வழித்தட எண்களை பட்டியலிடும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது..

ஆனால், கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிக பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

லஸ் சர்ச் சாலையின் மேற்கு மூலையில், கற்பகாம்பாள் நகர் போன்ற இடங்களில், பயணிகளுக்கு அவென்யூவில் உள்ள மரங்களால் கொஞ்சம் நிழல் கிடைக்கிறது.

ஆனால் ஸ்ரீனிவாசா அவென்யூவின் கிழக்கு முனை, ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் மக்கள் பேருந்துகளுக்காக வெயிலில் நிற்கிறார்கள் அல்லது உள்ளூர் கடைகளின் வாசலில் உள்ள நிழலில் நிற்கிறார்கள்.

மயிலாப்பூர் டைம்ஸிலிருந்து ‘புதிதாக மாற்றப்பட்ட பேருந்து வழித்தட வரைபடங்கள்’ மற்றும் புதிய பேருந்து நிறுத்தங்கள் போன்ற விவரங்களை வேண்டி எம்டிசிக்கு அனுப்பப்பட்ட பல செய்திகளுக்கு ‘வழங்குகிறோம்’ என்ற பதில் மட்டுமே கிடைத்தது.

Verified by ExactMetrics