நாடாளுமன்ற தேர்தல் 2024: சென்னை தெற்கின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். டாக்டர் ஜே ஜெயவர்தன் அதிமுக வேட்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு.

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் சென்னை தெற்கு வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனை திமுக தேர்வு செய்துள்ளது. (கீழே உள்ள புகைப்படத்தில் நீல நிற சல்வார் கமீஸ் அணிந்துள்ளார்)

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை வெளியிடப்பட்ட அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் டாக்டர் ஜே ஜெயவர்தனை 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தமிழச்சி என்கிற சுஜாதா வெற்றி பெற்றார்.

இங்கு அதிமுக வேட்பாளராக டாக்டர் ஜெ ஜெயவர்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் லீத் கேஸ்டில் பகுதியில் வசிப்பவர். (கீழே உள்ள புகைப்படத்தில், நடுவில் இருப்பவர்)

தெலுங்கானா கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் அரசியலுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன், சென்னை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Verified by ExactMetrics