செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை மாணவர்கள் யோகாசனம் செய்து அனுசரித்தனர்..

சிறப்பு விருந்தினராக சுவாமி சுப்ரஞானந்தா கலந்து கொண்டார்.

தினசரி யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மற்றும் பள்ளி முதல்வரும் கலந்து கொண்டு பேசினார்.

யோகா பயிற்றுவிப்பாளர் வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் 500 பேரின் தொடர் ஆசனங்கள் இந்த யோகா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.