நொச்சிக்குப்பத்தில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட நடமாடும் வேன்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நொச்சிக்குப்பத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜூலை 1) , காசநோய்க்கான நபர்களை பரிசோதிக்கும் வகையில் எக்ஸ்ரே மற்றும் உதவியாளர் வசதிகளை வழங்கும் 24 மணி நேர மருத்துவ சிகிச்சையளிக்கும் நடமாடும் வேன்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது காலனிகள் மற்றும் கிராமங்களுக்கு மருத்துவ சேவையை எடுத்துச் செல்லும் மாநில அரசின் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி, தா.வேலு, மேயர், மாநில அதிகாரிகள், உள்ளாட்சி உறுப்பினர் ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி, புகைப்படம்: மதன் குமார்

Verified by ExactMetrics