முத்தமிழ் பேரவையின் இசை விழாவில் கலைஞர்களை முதல்வர் கௌரவித்தார்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையின் ஆண்டு இசை விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், கலைஞர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை வளாகத்திற்கு அடுத்துள்ள அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கத்தில் ஜூலை 22ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் பாடகி எஸ்.மஹதி, வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, நாதஸ்வரம் கலைஞர் இஞ்சிக்குடி இ.பி.கணேசன் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் விருதுகள் பெற்றனர்.

ஜூலை 26 வரை இங்கு தினமும் கச்சேரிகள் நடைபெறவுள்ளது.

Verified by ExactMetrics