ஹோட்டல் சவேராவில் கிறிஸ்துமஸ் கேக்-மிக்ஸிங் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் சவேராவில் உள்ள ஒரு அரங்கில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு , ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் வருடாந்திர கேக்-மிக்ஸிங் விழாவிற்கு ஒன்று கூடினர். விருந்தினர்கள் வருவதற்கு முன்பே, ஹோட்டலின் சமையல்காரர்கள் பிளம் கேக் தயாரிப்பதற்கான அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்திருந்தனர். ஒரு மூலையில் அலங்கரிக்கப்பட்ட சில மேஜைகளிலும் மது பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஹோட்டல் விருந்தினர்களையும் அவர்களது நண்பர்களையும் நிகழ்வுக்கு அழைத்திருந்தது, அவர்கள் தயாரானதும், அவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தொப்பிகளை தலையில் வைத்து, அணிந்து கொண்டு பொருட்களை கலந்து, அதில் மதுபாட்டில்களை திறந்து மதுவை ஊற்றி கலக்கிக்னர். இது கிறிஸ்மஸ் தினத்தன்று பிளம் கேக்குகளாக தயாரிக்கப்படும்.
Verified by ExactMetrics