வின்சென்ட் டி பால் சொசைட்டியின் அபிராமபுரம் பிரிவு சார்பில் கடந்த வாரம் தேவாலய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்தியன் விஷன் இன்ஸ்டிட்யூட் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது
இப்பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அருட்தந்தை ஸ்டான்லி செபாஸ்டியன் அண்மையில் பிரார்த்தனையுடன் முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர். இங்குள்ள செயின்ட் வின்சென்ட் டி பால் சொசைட்டி பிரிவின் தலைவர் கே.ராகேஷ், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 46 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்