மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கல்லூரிகள் டிச., 2 ல் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் மாணவர்கள் வருகை குறைவாக இருக்கிறது. மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் மற்றும் முகமூடிகளை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி, இராணி மேரி கல்லூரி மாணவர்களில் 70% பேர் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறுகிறார். மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியும் அதன் முதுகலை படிப்புகளுக்கான மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இப்போது 10-க்கும் குறைவான மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள் என்று கல்லூரியின் பணியாளர்கள் கூறுகின்றனர். மற்ற அனைத்து படிப்புகளுக்கான வகுப்புகள் டிசம்பர் 7 திங்கள் முதல் தொடங்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Verified by ExactMetrics