ஆர்.ஏ.புரத்தில் அரசு நடத்தும் பயிற்சி மையத்தில் யூபிஎஸ்சி ப்ரீலிமினரி தேர்வுக்கு பயிற்சி

2023 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முதற்கட்டப் பயிற்சி பெற விரும்புவோர், தமிழ்நாடு அரசு ஆர் ஏ புரத்தில் உள்ள தனது மையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு அழைக்கிறது.

அனைத்திந்திய சிவில் சர்வீசஸ் கோச்சிங் சென்டர் விரிவான திட்டங்களைக் கொண்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – அக்டோபர் 27. நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் – நவம்பர் 13, காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை.

இந்தப் பயிற்சி யுபிஎஸ்சியின் முதல்நிலைத் தேர்வுக்கானது.

இங்கு முழுநேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை என அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய விவரங்களை www.civilservicecoaching.com என்ற வலைதளத்தில் பார்க்கவும்.

Verified by ExactMetrics