ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூகம், மகளிர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடியது.

மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமூகத்தினர் மகளிர் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை இணைந்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு வேடிக்கையான விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் ஸ்கிட்கள் இருந்தன.

விளையாய்ட்டுகளில் வழங்கப்பட்ட ‘டாஸ்க்’களில் அதிகபட்ச புள்ளிகளை பெற்ற பெண்ணிற்கு மகுடம் சூட்டப்பட்டது. வெற்றியாளர் சுமன பிரியா.

ராகமாலிகா அபார்ட்மெண்ட்ஸ், எண் 91, திருவேங்கடம் தெருவில் உள்ளது.

செய்தி: கல்யாணி முரளிதரன்

Verified by ExactMetrics