Categories: சமூகம்

ஏழை மக்களுக்கு இலவச உணவு ஒரு வார காலத்திற்கு தினமும் வழங்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேலைகளும் இலவச உணவு வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த பணியை சென்னை மாநகராட்சி செயல்படுத்துகிறது. இன்று மதியம் மயிலாப்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் கச்சேரி சாலை அருகில் உள்ள ஜீவா காலனியில் நடைபெற்ற மதிய உணவு வழங்கும் நிகழ்வில் பங்கேற்று ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். இதுபோன்று ஏழை மக்கள் இருக்கும் மற்ற அனைத்து பகுதிகளிலும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் உணவு, ஆர்.ஏ. புரம் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தயார் செய்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

18 hours ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

5 days ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

1 week ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago