ஏழை மக்களுக்கு இலவச உணவு ஒரு வார காலத்திற்கு தினமும் வழங்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு மூன்று வேலைகளும் இலவச உணவு வழங்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த பணியை சென்னை மாநகராட்சி செயல்படுத்துகிறது. இன்று மதியம் மயிலாப்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நடராஜ் அவர்கள் கச்சேரி சாலை அருகில் உள்ள ஜீவா காலனியில் நடைபெற்ற மதிய உணவு வழங்கும் நிகழ்வில் பங்கேற்று ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். இதுபோன்று ஏழை மக்கள் இருக்கும் மற்ற அனைத்து பகுதிகளிலும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் உணவு, ஆர்.ஏ. புரம் காமராஜர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தயார் செய்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது.

Verified by ExactMetrics