மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இன்று முதல் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளது.

இன்று டிசம்பர் 7ம் தேதி விவேகானந்தா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் இளநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இன்று கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியுள்ளது. விவேகானந்தா கல்லூரி, தேர்வை வகுப்பறைக்குள்ளேயே நடத்துகின்றனர். ஆனால் ராணி மேரி கல்லூரி தேர்வை ஆன்லைனில் நடத்துகின்றனர். இந்த தேர்வுகள் முடிந்த பிறகு வகுப்பறைக்குள்ளேயே வகுப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.

Verified by ExactMetrics