தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு தற்போது புதிய சேவைகள் அறிமுகம்.

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ், D.T.H ரீசார்ஜ், மின்சார கட்டணம், போன்ற வேலைகள் செய்து கொடுக்கின்றனர். இந்த மாதிரியான சேவைகள் முதலில் கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் செயப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இரண்டாவதாக தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்: 24992583

 

Verified by ExactMetrics