ஆன்லைனில் சஞ்சய் சுப்ரமணியனின் ‘தமிழும் நானும்’ இசை கச்சேரி டிசம்பர் 12ல் நடைபெறுகிறது

கர்நாடக இசையில் புகழ்பெற்ற சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் சிறப்பு கச்சேரியை வெளியிடுகிறார். இதன் சிறப்பு என்னவென்றால் ‘தமிழும் நானும்’ என்னும் தலைப்பில் வழங்கப்படும் இந்த கச்சேரியில் சஞ்சய் அவர்கள் அனைத்து பாடல்களையும் தமிழிலேயே பாடுவார்.  தமிழில் அறிமுகம் இல்லாத மியூசிக் கம்போசர்களின் பாடல்களை பாட உள்ளார். இந்த கச்சேரியை கடந்த இரண்டு வருடங்களாக மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதத்தில் அரங்கேற்றியுள்ளார். இந்த வருடம் கோவிட் 19 காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை ஆன்லைனில் வெப்ஸ்ட்ரீமிங் செய்கிறார். வருகிற டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இசை கச்சேரியில் பங்கேற்க ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய முகவரி : https://tamizhumnaanum.eventvirtually.com

Verified by ExactMetrics