கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் அபிஷேகத்தை காண்பதற்கு அதிகமான பக்தர்கள் கூட்டம்

கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இது போன்று நேற்று திங்கட்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் சிறப்பு என்னவென்றால் கார்த்திகை மாத அனைத்து திங்கட்கிழமைகளிலும் கபாலீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம் என்று கோவில் குருக்கள் தெரிவிக்கிறார். கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். வருகிற டிசம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை காலையில் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.