மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை மாலை குவிந்த மக்கள் கூட்டம்.

மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன் வாங்குவதற்கு சாந்தோமில் உள்ள மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.

மாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த லூப் சாலையில் மீன் வாங்க வாகனங்களை ஓட்டிச் சென்றனர், சிறிய கடைகளில் சிலர் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.

மீன் வியாபாரிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படுவதால் அந்த வியாபாரத்தை ஈடுகட்ட இந்த விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மெரினா லூப் சாலையில் இருக்கும் திறந்தவெளி மீன் மார்க்கெட்டில் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் கடல் அருகே இருப்பதால் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தினமும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

Verified by ExactMetrics