மந்தைவெளியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

மந்தைவெளி தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மூன்று ஊழியர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் வங்கி கிளை நேற்று மூடப்பட்டது.

கோவிட் தொற்று நெறிமுறையின்படி வங்கி கிளை ஜனவரி 16 வரை மூடப்படும் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாப்பூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் கிழக்கு மாட தெரு கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள் காசோலைகளை டெபாசிட் செய்யலாம் என்று வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்தைவெளி கிளை ஜன.17ல் திறக்கப்படும்.

செய்தி : சி.ஆர். பாலாஜி

Verified by ExactMetrics