மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது.
நடன குரு ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது நடனக் கலைஞர்கள் ‘கோதா’ நடன நிகழ்ச்சியை வழங்கினர். நடன நிகழ்ச்சி நடைபெற்ற ஆடிட்டோரியத்தில் இருந்த பெரும்பாலானோர் குரு ஊர்மிளாவின் அகாடமியில் நடனம் கற்கும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள். முன்னதாக நடனக் கலைஞர் கயல்விழி கபிலனின் சோலோ பரதநாட்டியம் நடந்தது.
துவக்க விழாவில் அப்பல்லோ மருத்துவமனையின் ப்ரீத்தா ரெட்டி மற்றும் நடன குரு பத்மா சுப்ரமணியம், நல்லி குப்புசாமி மற்றும் என். ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கே.என்.ராமசுவாமி, இந்த நாட்டிய திருவிழா (டிச.26 வரை நடைபெறும்) வாரநாட்களில் இரண்டு நடன நிகழ்ச்சிகளும், வார இறுதி நாட்களில் மூன்று நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும், நடன நிகழ்ச்சியை கண்டுரசிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு என்று தெரிவித்தார். மேலும் நாட்டிய நாடன நிகழ்ச்சிகள் www.chennaibhavans.org என்ற வலைதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…