கோவில் குளத்தில் மீன்கள் இறந்த சம்பவம். இறந்த மீன்கள் மற்றும் குளத்தின் தண்ணீர் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததால் இறந்த மீன்களின் மாதிரிகள் மற்றும் குளத்தில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீன் மாதிரிகள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தண்ணீர் மாதிரிகள் அரசு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics