மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோவிலில் குளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தாலும் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. ஏனென்றால் கோவில் அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதிக நேரம் மக்கள் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டரை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் குளத்தின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் உடனடியாக உறிஞ்சப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் தெருக்களில் ஆங்காங்கே குழாய்கள் அமைது அந்த குழாய்களை ஒருங்கிணைத்து குளத்தின் அடிப்பகுதிக்கு மழை நீர் சென்று சேரும் விதத்தில் ஒரு கட்டமைப்பை அமைத்தனர். அவ்வாறு மழை நீர் குளத்தில் சென்று சேர்ந்தாலும் சுமார் ஒரு மணி நேரத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.
நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு அருகில் உள்ள லஸ் அவென்யூவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடம் இடிக்கப்படுகிறது. செயல்முறை சிறிது காலத்திற்கு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் ஊர்வலங்கள் மற்றும் திருவிழாக்களின் ஏற்பாடுகள் மற்றும் நடத்துவதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தன்னார்வ அமைப்பின் உறுப்பினர்கள்,…
மயிலாப்பூர் சிவசாமி சாலை மண்டலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் திட்டப் பணியை முடிக்க மறுபுறம் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்கு…
நவம்பர் மாத இறுதியில், சென்னை கேந்திரா பாரதிய வித்யா பவனின் இசை விழா தொடங்கும் போது டிசம்பர் சீசன் ஆரம்பமாகிறது.…
இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு புகழ்பெற்ற டிசம்பர் சீசனில் உங்கள் குடியிருப்பில் அல்லது உங்கள் வீட்டில் கூடுதலாக உள்ள அறையை…
மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…