எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் முறையாக மாலை அணிந்து கொண்டனர்.

எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு இன்று அதிகாலை, கார்த்திகை முதல் நாள் என்பதால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்காக வந்திருந்தனர்.

கோவிலில் உள்ள குருசாமி ஒருவர் ஆண்கள் மற்றும் பெண்களின் கழுத்தில் மணி மாலைகளை அணிவித்தார்.

மேலும் அனைத்து பக்தர்களும் முகக்கவசங்கள் அணிந்து வருமாறும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், வரும் நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.