ஆழ்வார்பேட்டையில் இந்த வார இறுதியில் நன்கொடை முகாம்: அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைகளை திரட்டுவதற்காக, அக்கம் பக்கத்து தன்னார்வலர்கள் கூஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக ஜூலை 9 & 10 – (சனி & ஞாயிறு) ஆழ்வார்பேட்டையில் இரண்டு நாள் பொருட்கள் சேகரிப்பு முகாமை நடத்துகின்றனர்.

உடைகள், பாத்திரங்கள், பள்ளி எழுது பொருட்கள், பொம்மைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இங்கு வழங்கலாம்.

இடம்: எண் 2, மேற்கு தெரு, ஸ்ரீராம் நகர், ஆழ்வார்பேட்டை.
லேண்ட்மார்க் : போலீஸ் பூத் / மெக்சி கிச்சன் ரெஸ்டாரன்ட்க்கு அடுத்து

மேலும் விவரங்களுக்கு – மங்களா சந்திரன் (9322402161) / விஷ்ணு ஹரி (9500016611)

Verified by ExactMetrics