ஆர்.கே.மட சாலையின் கீழ் வடிகால் உடைந்து, சீரமைப்பு பணி நடந்து வருவதால், சாலை தற்காலிகமாக மூடப்பட்டது

மந்தைவெளி மார்க்கெட் சந்திப்பு அருகே சாலை சீரமைப்பு பணி நடைபெற்றுவருவதால், சனிக்கிழமை மாலை மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு முக்கிய வடிகால் சேதமடைந்து, உடைந்திருந்ததால், அதை சரிசெய்ய, மெட்ரோவாட்டர் தொழிலாளர்கள் சாலையின் ஒரு பகுதியை தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. சேதம் சற்று அதிகமாக இருந்தது.

ஆர் கே மட சாலையில் செல்லும் எம்டிசி பஸ்கள் லஸ் பாயின்ட்டில் திருப்பி விடப்பட்டன.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics