137 ஆண்டுகளாக கச்சேரி சாலையில் இயங்கி வந்த டப்பா செட்டி கடை அங்கிருந்து வெளியேறி இப்போது வடக்கு மாட வீதியில் திறக்கப்பட்டுள்ளது.

கச்சேரி சாலையில் 137 வருட வியாபாரத்திற்குப் பிறகு, பிரபலமான டப்பா செட்டிக் கடை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகே வடக்கு மாட வீதிக்கு மாறியுள்ளது.

கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயிலின் முதற்கட்டப் பணிகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்குள்ள கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழைய கடையின் அளவுள்ள புதிய கடைக்கு வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல வருவதாக உரிமையாளர் கூறுகின்றார்.

மேலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கடை கோவிலுக்கு அருகில் இருப்பதால், தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவதாக அவர் கூறினார்.

செய்தி, புகைப்படம்: எஸ்.பிரபு