நகர சபைக்கான தேர்தலில் வாக்குப்பதிவு: காலை நேரங்களில் பெரும்பாலான இடங்களில் மந்தம்.

மயிலாப்பூர் முழுவதும் இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 10.30 மணி வரை நகர சபைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மெதுவாகவும், மந்தமாகவும் இருந்தது.

ஒரு சில சாவடிகளில் மட்டும் விறுவிறுப்பாக இருந்தது ஆனால் ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம், ஆர்.ஏ.புரம் போன்ற இடங்களில் வாக்குசாவடிகளுக்கு வெளியே ஆட்கள் இல்லை.

பல முதியவர்கள் காலை 8 மணிக்குப் பிறகு சாவடிக்குச் சென்றதை காண முடிந்தது.

அனைத்துச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் வாக்களித்த சிலர், தேர்தல் பணியாளர்கள் கண்ணியமாக இருந்ததாகவும், பணியாளர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்ததாகவும் தெரிவித்தனர்.

 

Verified by ExactMetrics