கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தகடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள்.

இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில் அமைந்துள்ள ‘உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ (Uyir Organic Farmers Market) கடையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், கேசர் மற்றும் செந்தூரம் ஆகிய வகைகள் இங்கு கிடைக்கின்றன. இவற்றில் இமாம் பசந்த் வகையே மிகவும் விலை உயர்ந்ததாகும் – ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்படுகிறது.
முலாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற பருவகாலப் பழங்கள் பலவும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இக்கடையில் காய்கறிகள், பழங்கள், இயற்கை உணவுப் பொருட்கள் மற்றும் பலவும் விற்பனைக்கு உள்ளன.
முகவரி: கிழக்கு அபிராமபுரம் 3-வது தெரு
தொலைபேசி எண்: 8754781144

செய்தி: விபா ரமேஷ் / பயிற்சி நிருபர்

Verified by ExactMetrics