தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜ் அவர்கள் மயிலாப்பூர் பகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • கலங்கரை விளக்கம் முதல் நந்தனம் வரை புதியதாக வரவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை மக்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • மயிலாப்பூர் மாட வீதிகள் அனைத்தும் அழகுபடுத்தப்படும்.
  • வெங்கடேச அக்ரகாரத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டி தெருக்களில் உள்ள அனைத்து காய்கறி கடைகளும் அங்கு மாற்றப்படும்.
  • மயிலாப்பூருக்கு நிறைய யாத்திரிகர்கள் வருவதால் அவர்களின் வசதிக்காக இங்கு ஒரு யாத்ரி நிவாஸ் கட்டப்படும்.
  • மயிலாப்பூரின் முக்கிய பகுதியில் ஒரு மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டப்படும்.
  • பக்கிங்காம் கால்வாய் ஓரமாக வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயை சுத்தம் செய்ய ஒரு திட்டம்.
  • பல்லக்கு மாநகர், விசாலாட்சி தோட்டம், கபாலி தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்கு வசிக்கும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்படும்.
  • சாலையோரம் உள்ள ஆட்டோ ரிப்பேர் கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் அதிமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago