ஆர்.ஏ.புரம் மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு மயிலாப்பூரில் தங்கும் இடம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தவர்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவிந்தசுவாமி நகர் (ஆர்.ஏ.புரம் மண்டலம்) பகுதியில் வசிப்பவர்கள், மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இங்கிருந்து ஏற்கனெவே வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் (சிலர் ஏற்கனவே பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்) மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் புதிய குடியிருப்புத் கட்டிடங்களில் தங்கலாம்.

திங்களன்று, நகரில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலைய வளாகத்திற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் நீண்ட, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் தீக்குளித்து பின்னர் இறந்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நகரில் வசிப்பதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்; அவர்களை தொலைதூர வளாகங்களுக்கு மாற்றுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் படிப்பு மோசமாக பாதிக்கப்படும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

Verified by ExactMetrics