டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பெரிய அளவிலான தஞ்சை ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள லட்சுமி எத்திராஜ் ஆர்ட் கேலரியில் தஞ்சை ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெறுகிறது. இந்த ஆர்ட் கேலரி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பல்வேறு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பாலாஜி தாயார் (6×4 அடி), லட்சுமி ஹயக்ரீவர் (4×3 அடி), தன்வந்திரி (5×4 அடி) மற்றும் ராமானுஜர் (4×3 அடி) ஆகியோரின் பெரிய அளவிலான ஓவியங்கள் கேலரியில் உள்ளது.

ராதா-கிருஷ்ணர், கஜ லட்சுமி, சரஸ்வதி மற்றும் பிற தெய்வங்களின் ஓவியங்களும் உள்ளன.

தற்போது 100க்கும் மேற்பட்ட ஓவியங்களின் தொகுப்பு இருப்பதாக கேலரி நிர்வாகம் கூறுகிறது.

முகவரி – எண். 68, கண்ணப்பன் இல்லம், டாக்டர். ஆர். கே. சாலை, மயிலாப்பூர் (கிளாரியன் பிரசிடெண்ட் ஹோட்டலுக்கு எதிரே). தொலைபேசி எண் : 9840092435 / 48058102.

Verified by ExactMetrics