டெங்கு, மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், காலனிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

மயிலாப்பூர் மண்டலத்தில் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கிடைத்த புகாரின் பேரில், மயிலாப்பூர் மண்டலத்தில் அடர்ந்த மக்கள் அதிகம் உள்ள காலனிகளில் கொசு மருந்து புகை போடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து, உள்ளூர் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவ மையங்கள் இது போன்ற கேஸ்கள் சிறிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

தூய்மை பணியாளர்களும் காலனிகளுக்குச் சென்று, கொசு உற்பத்தியை ஊக்குவிக்கும் மழைநீரை தேக்கி வைத்திருக்கும் டயர்கள், தொட்டிகள், டப்பாக்கள் போன்ற கழிவுப் பொருட்களை வெளியே வைக்க வேண்டாம் என்று மக்களிடம் கூறி வருகின்றனர்.

Verified by ExactMetrics