நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மெரினா லூப் சாலை, நடைபாதையில் உள்ள பங்க் கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வண்டியில் ஏற்றினர்.

மெரினா லூப் சாலையின் ஒரு ஓரத்தில் இருந்த அனைத்து தற்காலிக கடைகளையும் மாநகராட்சி பணியாளர்கள் காவல்துறையினரின் ஆதரவுடன் இன்று புதன்கிழமை காலை அகற்றினர்.

அவர்கள் ஜேசிபிகளைப் பயன்படுத்தி, பங்க் கடைகள் மற்றும் தற்காலிக குடிசைகளை இடித்து அகற்றினர்.

இந்த சாலையில் நடைபாதை வியாபாரிகள் குழப்பம் விளைவித்து, வாகனங்கள் செல்வதற்கு இடையூறு விளைவிப்பதோடு, விபத்துக்களையும் ஏற்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வண்டிப்பாதையில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் வெளியேற்றி, ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சியிடம் (ஜிசிசி)கேட்டுக்கொண்டனர். தானாக முன்வந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது அவர்கள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

இன்று காலை, லைட் ஹவுஸ் அருகே மணல் ஓரம் இருந்த மீன் வியாபாரக் கடைகளை, குடிமைப் பணியாளர்கள் அப்படியே விட்டுச் சென்ற நிலையில், சாலையின் மறுபுறம், காலனிகளை ஒட்டியிருந்த அனைத்து கடைகளும், அகற்றப்பட்டன.

Verified by ExactMetrics