மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் ரோசரி மெட்ரிக் பெண்கள் பள்ளி கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பதினான்கு வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான சென்னை மண்டல பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் சாந்தோம் ரோசரி மெட்ரிக் பெண்கள் பள்ளி கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அந்த அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் செயின்ட் ரபேல் பெண்கள் பள்ளி அணியை வென்றது.இறுதிப் போட்டி மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள ஜிசிசி ‘அல்போன்சா’ விளையாட்டு மைதானத்தில் சமீபத்தில் நடந்தது.

ஆறு அணிகள் பங்கேற்றன.

எப்சி கலா ரோசரியில் விளையாட்டு ஆசிரியராக உள்ளார். பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த நிர்மல் என்பவர் பயிற்சியாளராக உள்ளார்.

Verified by ExactMetrics