ஆழ்வார்பேட்டை எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இலவச ஹெல்த் கேர் திட்டம்

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எம்ஆர்சி நகர் & ஆழ்வார்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 18 வரை இலவச சலுகையுடன் கூடிய மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த இலவச மருத்துவ சேவையில் அப்பல்லோவின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக தனிப்பட்ட சுகாதார விஷயங்களில் வழிகாட்டுதலை வழங்குவது ஆகியவை அடங்கும். மயிலாப்பூர்வாசிகள் பின்வரும் சேவைகளில் ஏதேனும் அல்லது அனைத்தையும் இலவசமாகத் தேர்வு செய்யலாம்: அடிப்படை மருத்துவ சேவை, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சோதனை, கண் பரிசோதனை, ENT மற்றும் பல் பரிசோதனை, மருத்துவ பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் டிஜிட்டல் மயமாக்கல், தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை திட்டம் மற்றும் சில.

இதில் பயன் பெற பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது; சிறப்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்கான போக்குவரத்து மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்படும். மருத்துவமனைகயின் மக்கள் தொடர்பாளர் பிரிவின் செய்தி குறிப்பு கூறுகிறது.

மேலும் விவரங்களுக்கு – ராமநாதன் லக்ஷ்மணன் / மேலாளர்- செயல்பாடுகள்/ அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள் – எம்.ஆர்.சி நகர் தொலைபேசி எண்: 044 66862000, 6380742387

Verified by ExactMetrics