மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்!

‘உங்களுக்குள் பொங்கித் ததும்பும் அகிம்சைச் சக்தியின் மூலம் உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை சுயக்கட்டுப்பாடு, சுயச்சார்புடன் எவ்வாறு அமைதியாகத் தீர்த்துக் கொள்கிறீர்கள்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரையை எழுதி, வரும் ஜனவரி 20ம் தேதிக்குள் கிடைக்குமாறு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்..

வயது வரம்பு: 10 முதல் 25 வயது வரை உள்ள மாணவர் அல்லது மாணவர் அல்லாதோர்.

கட்டுரையாளர் தமது பெயர், வயது, படிப்பு அல்லது பணி, தபால் முகவரி, செல்பேசி எண் அல்லது மின்னஞ்சல் விபரங்களைத் தெளிவாகத் தரவேண்டும்.

சிறந்த நூறு கட்டுரையாளர்களுக்கு பரிசு நூல்ப்பெட்டி காந்தி நினைவு தினமான ஜனவரி 30ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்படும்.

கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி: செயலர், காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018. மின்னஞ்சல்: kulandhaisamy.gpf@gmail.com

Verified by ExactMetrics