காந்தி அமைதி அறக்கட்டளையின் பள்ளி மாணவர்களுக்கான கைவினைப் பயிற்சிபட்டறை

ஆழ்வார்பேட்டையில் உள்ள காந்தி அமைதி அறக்கட்டளை, ‘Youth for Peace’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான ஆக்கப்பூர்வமான பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முயற்சி இளைஞர்களிடையே உடலுழைப்பு மற்றும் படைப்பாற்றல் மதிப்புகளை புகுத்துவதையும், மீண்டும் நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள அறக்கட்டளையின் அலுவலக வளாகத்தில் இம்மாதம் 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு இந்த பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காந்திய சிந்தனையில் முதுகலைப் பட்டம் பெற்றவரும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவருமான சங்கரி பூர்ணச்சந்திரனால், குழந்தைகளுக்கான கைவினைத் தயாரிப்பு அமர்வுகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

கைவினைப் பட்டறையின் முதல் அமர்வில், ‘சென்னை மேல்நிலைப் பள்ளி, வன்னிய தேனாம்பேட்டை’யைச் சேர்ந்த 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேர், படத்தொகுப்பு கலைப் படைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Verified by ExactMetrics