சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெரினாவில் உள்ள காந்தி சிலை புதிய இடத்திற்கு மாற்றப்படலாம்.

மெரினா புல்வெளியில் காந்திஜியின் சிலை அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு சிலை மாற்றப்படலாம். ஏனென்றால் இங்குதான் மெட்ரோவின் நிலத்திற்கு அடியில் பெரிய நிலையம், மெட்ரோவின் இரண்டாம் கட்ட ரயில் பாதை ஆகியவை கட்டப்படவுள்ளது.

திங்களன்று, சென்னை மெட்ரோ ரயில் தளத்தில் தொழிலாளர்கள், தமிழ்நாடு போலீஸ் தலைமையகம் மற்றும் இராணி மேரி கல்லூரிக்கு எதிரே குறுக்காக நிற்கும் சிலையைச் சுற்றி துணியால் மூடியுள்ளனர். தொடர்ந்து கிரேன்கள் வைக்கப்பட்டிருந்தன.

சிலை எங்கு கொண்டு செல்லப்படும் என்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இராணி மேரி கல்லூரி முனையிலிருந்து லைட் ஹவுஸ் வரை உள்ள மெரினாவின் புல்வெளிகள் சென்னை மெட்ரோவால் நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன.

Verified by ExactMetrics