Vector illustration in flat style
சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டையில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் லேப் டெக்னீசியன், ரேடியோலஜி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஓராண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்றுவருகிறது. ஓராண்டுக்கு ரூபாய் 1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் காலை நேரத்திலும் பயிற்சிகள் மாலையிலும் நடத்தப்படும். மெடிக்கல் சம்பந்தமான படிப்புகளுக்கு அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு சேரலாம்.
ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் சங்கரநாராயணன் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த படிப்புகள் சம்பந்தமான விவரங்களை அருகிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்த படிப்புகள் குறுகிய காலத்தில் ஏழை மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரியில் சேர விரும்புபவர்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள விண்ணர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியை தொடர்புகொள்ளவும்.
சேர்க்கை சம்பந்தமான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 9941629635.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…