லஸ்ஸில் உள்ள நவசக்தி பிள்ளையார் கோவிலில் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழா

லஸ் சந்திப்பு அருகே உள்ள நவசக்தி பிள்ளையார் கோவிலில் கொரோனா தொற்று காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

கோயிலில் அடுத்த வாரம் முழுவதும் ஒவ்வொரு மாலையும் பெரிய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை, பட்டிமன்றம் – பிரபல பட்டிமன்றம் நீதிபதி கே.ஞானசம்பந்தன் தொகுத்து வழங்குகிறார். செவ்வாய்கிழமை மாலை, பாரதி பாஸ்கர் விநாயகரின் மகத்துவம் குறித்து 90 நிமிட உரையை வழங்குகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி புதன்கிழமை (ஆக. 31) வீரமணி ராஜு குழுவினரின் பக்திப் பாடல்கள் கச்சேரி மூன்று மணி நேரம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 1ம் தேதி புஷ்பவனம் குப்புசுவாமி மற்றும் அவரது மனைவி அனிதாவின் பக்தி கச்சேரி நடக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை நித்யஸ்ரீ மகாதேவன் கச்சேரியும், அடுத்த சனிக்கிழமை ராஜேஷ் வைத்தியாவின் வீணை கச்சேரியும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்

வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவத்தை மக்கள் கண்டு மகிழலாம். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 9 மணிக்குத் தொடங்கும் விநாயகப் பெருமானின் வீதி ஊர்வலத்துடன் ஏழு நாட்கள் நடைபெற்று வந்த உற்சவம் முடிவடையும்.

செய்தி : எஸ்.பிரபு
இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது

Verified by ExactMetrics