செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கல்லறையில் தண்ணீர் தேங்கியது.

செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கல்லறையில், கடந்த வாரம் சீராக மழை பொழிந்ததால் கல்லறையில் மழை நீர் தேங்கியது. சில கல்லறைகள் மீது சேரும் சகதியும் இருந்தது.

இந்த கல்லறையானது கிறிஸ்தவர்களுக்கானது, மற்றும் ஆர் ஏ புரத்தில் உள்ள பிரகாச மாதா ஆலயத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

ஆனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை பொழிந்த போது கல்லறையில் தண்ணீர் அவ்வளவாக இல்லை. ஆனால் வளாகம் முழுவதும் ஈரமாக உள்ளது.