அனைத்து உள்ளூர் கடைகளிலும் பசுமை பட்டாசுகள் விற்கப்படுகின்றன

தீபாவளிக்கு பட்டாசு விற்கும் அனைத்து உள்ளூர் கடைகளிலும் அரசு விதிகளின்படி பசுமை’ பட்டாசுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு கடைகளிலும் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்கு எதிரே ஆர்.கே.மட சாலையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் வாரத்தின் நடுப்பகுதியில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் பட்டாசுகளை வாங்கிச்சென்றனர்.

கிப்ட் பாக்ஸ் ரூ.150 முதல், பெரிய பேக்குகள் ரூ.10,000 வரை உள்ளது.

Verified by ExactMetrics